Saturday, 25 April 2015

suvaiyo suvai அரைத்து செய்யும் (விட்ட) கோழி பிரியாணி

அரைத்து செய்யும் (விட்ட) கோழி பிரியாணி
தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி  ½  கிலோ (அ) இரண்டரை  கப் ( 15 நிமிடம் ( நீர் ஊற்றி)  ஊற வைக்கவும்               
கோழி ¾  கிலோ
வெங்காயம் 2 + தக்காளி  3  (தனித்தனியாக விழுதாக அரைக்கவும்
இஞ்சி + பூண்டு விழுது    1 t ea spoon
பச்சை மிளகாய்  5
கொத்தமல்லி    கைப்பிடி அளவு
(பச்சை மிளகாய்  5 + கொத்தமல்லி    கைப்பிடி அளவு இரண்டையும் நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும் )
மிளகாய் 2 teaspoon + தனிய  3  teaspoon ­ + மஞ்சள் தூள் 1 teaspoon + பிரியாணி மசாலா ½  teaspoon
பட்டை + லவங்கம் + ஜாதி பத்திரி+ பிரிஞ்சி இலை ( எல்லாம் ஓரிரண்டு துண்டுகள்)
தயிர்  ஒரு கப்
செய்முறை
Step 1
கோழி கறி + வெங்காயம் விழுது  + தக்காளி விழுது + பச்சை மிளகாய்  கொத்தமல்லி விழுது, தயிர்  ஒரு கப் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
Step 2
அடுப்பில் குக்கரை வைத்து  (Cookeril) எண்ணைய் விட்டு +   நெய் விட்டு + பட்டை + லவங்கம்  + ஜாதி பத்திரி+ பிரிஞ்சி இலை (எல்லாம் ஓரிரண்டு துண்டுகள்) சோம்பு ½ teaspoon நன்கு வதக்கவும்

Step 1 + step 2  இணைக்கவும்
அதாவது குக்கரில் ஊறவைத்த கோழி கறி + வெங்காயம் விழுது  + தக்காளி விழுது + பச்சை மிளகாய்  கொத்தமல்லி விழுது, தயிர்  ஒரு கப் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைதத்தை சேர்க்கவும்.
நன்கு வதக்கவும் பின்பு  இஞ்சி + பூண்டு விழுது    1 t ea spoon + மிளகாய் 2 teaspoon + தனிய  3  teaspoon ­ + மஞ்சள் தூள் 1 teaspoon + பிரியாணி மசாலா ½  teaspoon  சேர்த்து கோழி கறி நிறம் மாறி வரும் வரை நன்கு வதக்கவும்.
Step 3
ஊறவைத அரிசியை குக்கரில் சேர்க்கவும் (குக்கரில் நீர் நிறைய இருந்தால் அதையும் சேர்த்து கணக்கிட்டு ஒரு பங்கு அரிசிக்கு ஒண்ணரை பங்கு நீர் சேர்க்கவும ) நீரின் அளவு அதிகமானால் பிரியாணி குழைந்து விடும்.  
 Step 4
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை  காத்திருந்து அடுப்பை நிறுத்திவிடவும், குக்கரை திறக்கும் நிலை வந்தவுடன் திறந்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய்விட்டு அரிசி உடையாமல் கிளறவும்.
Step 5
சுவையான பிரியாணி தயார்