இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
| சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி |
முட்டை - 3
தேங்காய் - கால் கப்
ஊறவைத்த முந்திரி - 5
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
சாம்பார் பொடி (கலவை தூள்) - 3 தேக்கரண்டி (அ)தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
பட்டை கிராம்பு பரிஞ்சி இலை சிறிது
-- தாளிக்க
-- தாளிக்க
எண்ணெய் – 1 கரண்டி
உப்பு
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்பட்டை கிராம்பு பரிஞ்சி இலை தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்பட்டை கிராம்பு பரிஞ்சி இலை தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி குழைந்து வந்ததும் சாம்பார் பொடி மஞ்சள் தூள் - சிறிது வகைகள் சேர்த்து பிரட்டி, சிறிது நீர் விட்டு மசாலா வாசம் போகும் வரைகொதிக்கவிடவும்.
ஊற வைத்த முந்திரியுடன் தேங்காய் சேர்த்து
நன்றாக அரைத்துக் கொள்ளவும் முந்திரி விழுதை கொதிக்கும் கலவையில் ஊற்றவும்.
ஒரு கொதி வரத் துவங்கும் போது முட்டையை ஒவ்வொன்றாக ஒன்றின் மேல் ஒன்று படாமல் உடைத்து
ஊற்றி மூடி வேகவிடவும். முட்டை கலந்து வர விரும்பினால் 3 நிமிட இடைவெளியில் திறந்து
கலந்துவிட்டு மீண்டும் மூடி வேகவிடலாம். இல்லையெனில் முழுவதும் வேகும் வரை கலக்காமல்
வேகவிடவும் முட்டை வெந்ததும் இறக்கிவிடவும். சுவையான முட்டைக்குருமா தயார்
மு
No comments:
Post a Comment