Saturday, 25 April 2015

suvaiyo suvai அரைத்து செய்யும் (விட்ட) கோழி பிரியாணி

அரைத்து செய்யும் (விட்ட) கோழி பிரியாணி
தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி  ½  கிலோ (அ) இரண்டரை  கப் ( 15 நிமிடம் ( நீர் ஊற்றி)  ஊற வைக்கவும்               
கோழி ¾  கிலோ
வெங்காயம் 2 + தக்காளி  3  (தனித்தனியாக விழுதாக அரைக்கவும்
இஞ்சி + பூண்டு விழுது    1 t ea spoon
பச்சை மிளகாய்  5
கொத்தமல்லி    கைப்பிடி அளவு
(பச்சை மிளகாய்  5 + கொத்தமல்லி    கைப்பிடி அளவு இரண்டையும் நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும் )
மிளகாய் 2 teaspoon + தனிய  3  teaspoon ­ + மஞ்சள் தூள் 1 teaspoon + பிரியாணி மசாலா ½  teaspoon
பட்டை + லவங்கம் + ஜாதி பத்திரி+ பிரிஞ்சி இலை ( எல்லாம் ஓரிரண்டு துண்டுகள்)
தயிர்  ஒரு கப்
செய்முறை
Step 1
கோழி கறி + வெங்காயம் விழுது  + தக்காளி விழுது + பச்சை மிளகாய்  கொத்தமல்லி விழுது, தயிர்  ஒரு கப் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
Step 2
அடுப்பில் குக்கரை வைத்து  (Cookeril) எண்ணைய் விட்டு +   நெய் விட்டு + பட்டை + லவங்கம்  + ஜாதி பத்திரி+ பிரிஞ்சி இலை (எல்லாம் ஓரிரண்டு துண்டுகள்) சோம்பு ½ teaspoon நன்கு வதக்கவும்

Step 1 + step 2  இணைக்கவும்
அதாவது குக்கரில் ஊறவைத்த கோழி கறி + வெங்காயம் விழுது  + தக்காளி விழுது + பச்சை மிளகாய்  கொத்தமல்லி விழுது, தயிர்  ஒரு கப் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைதத்தை சேர்க்கவும்.
நன்கு வதக்கவும் பின்பு  இஞ்சி + பூண்டு விழுது    1 t ea spoon + மிளகாய் 2 teaspoon + தனிய  3  teaspoon ­ + மஞ்சள் தூள் 1 teaspoon + பிரியாணி மசாலா ½  teaspoon  சேர்த்து கோழி கறி நிறம் மாறி வரும் வரை நன்கு வதக்கவும்.
Step 3
ஊறவைத அரிசியை குக்கரில் சேர்க்கவும் (குக்கரில் நீர் நிறைய இருந்தால் அதையும் சேர்த்து கணக்கிட்டு ஒரு பங்கு அரிசிக்கு ஒண்ணரை பங்கு நீர் சேர்க்கவும ) நீரின் அளவு அதிகமானால் பிரியாணி குழைந்து விடும்.  
 Step 4
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை  காத்திருந்து அடுப்பை நிறுத்திவிடவும், குக்கரை திறக்கும் நிலை வந்தவுடன் திறந்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய்விட்டு அரிசி உடையாமல் கிளறவும்.
Step 5
சுவையான பிரியாணி தயார்









Friday, 24 April 2015

காரைக்குடி சிக்கன் கறி

காரைக்குடி சிக்கன் கறி
காரைக்குடி சிக்கன் கறி
சிக்கன்               -1/2
வெங்காயம்                              =1
தக்காளி                                        -2
கறிவேப்பிலை                        -1/4 tea spoon
சோம்பு                                             -
உப்பு/எண்ணை
சாம்பார் பொடி                        - 2 tea spoon
மஞ்சள்
பச்சை மிளகாய்                     -3
இஞ்சி பூண்டு விழுது     - 1 teaspoon
அரைக்க
மிளகு                                       -1 teaspoon
சீரகம்                                      - 1 teaspoon
காய்ந்த மிளகாய்              - 5
தனியா                                     3 teaspoon
பட்டை/கிராம்பு                  - 1-1
ஏலகாய்                                 - 1
மராத்தி மொக்கு                   1  சிறிய பாகம்
ஜாதிக்காய்            -
கறிவேப்பிலை
தேங்காய் துருவல்
செய்முறை
௧. சிக்கன் + மஞ்சள் தூள் + உப்பு சிறிது + இஞ்சி பூண்டு விழுது
      பிரட்டி வைக்கவும் ( ஊற வைக்கவும் )
௨ தே துருவல் + கறிவேப்பிலை தவிர அரைக்க கொடுத்த பொருட்கள் அனைத்தையும் வறுத்து அரைக்கவும் பின்பு தேங்காய் துருவலையும் கறிவேப்பிலையும் சேர்த்து அரைக்கவும்
௩. கடாயில் எண்ணைவிட்டு
      சோம்பு தாளித்து + கறிவேப்பிலை + வெங்காயம் + பச்சை மிளகாய் +  தக்காளி + சாம்பார் பொடி இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
௪. ஊறவைத்த சிக்கனை +மூடி போட்டு நீர் விடாமல் நன்கு வேகவைக்கவும்
௫  அரைத்த மசாலாவை அரைக்கவும்
௬ சிறிது மிளகு தூள் சேர்த்து இறக்கவும்