chuvaiyo chuvai சமையல்-ஆட்டுக்கால் பாயா 1

இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 

 ஆட்டுக்கால் பாயா
சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி 

 தேவையான பொருட்கள் 

மஞ்சள்                    1தேக்கரண்டி   
மிளகாய்                  2   தேக்கரண்டி
பச்சை மிளகாய்        2
தனியா                    3 தேக்கரண்டி
கறிவேப்பிலை         சிறிதளவு 
வெங்காயம்             2 பெரியது 
தக்காளி                   3 பெரியது 
 எண்ணை                தேவையான  அளவு 
செய்முறை 

ஆட்டுக்காலை 1/2 தேக்கரண்டி  மஞ்சள் சேர்த்து  நன்கு வேகவைத்து   கொள்ளவும். 

வாணலியை சூடாக்கி எண்ணை விட்டு கறிவேப்பில்லை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை மிளகாய் 2 கீறி போட்டு பச்சை வாசனை போக வதக்கவும் இத்துடன் நறுக்கிய வெங்காயம் பொனிரமானவுடன்  தக்காளி சேர்த்து தக்காளி குழைந்து வரும் வரை வதக்கி மிளகாய் மஞ்சள்1/2 தேக்கரண்டி தனியா சேர்த்து நன்கு வேகவிடவும் இத்துடன் ஆட்டுக்காலை நீருடன் சேர்த்து  நன்கு கொதிக்கவிடவும் 
பின் கொத்தமல்லி  தூவி இறக்கிவிடவும்.

சுவையான    ஆட்டுக்கால்  பாயா  

குறிப்பு 
இந்த முறையில் தேங்காய் சேர்க்காமல்  செய்தோம் 



No comments:

Post a Comment