கெழங்கா மீன் Kilanga Meen
இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
தேவையானவை
கெழங்கா மீன் - 6
சாம்பார் பொடி -3 மேஜை கரண்டி ( அல்லது மிளகாய் தூள் 2தேக்கரண்டி + தனியா தூள் 3 தேக்கரண்டி)
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
முட்டை
பொட்டுக்கடலை 2 கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
புளி கரைச்சல் சிறிதளவு
கெழங்கா மீன் வறுவல் செய்முறை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சாம்பார் பொடியை ( சாம்பார் பொடி செய்வது பற்றிய குறிப்பை எனது பிற இடுகைகளில் காணலாம் .
கெழங்கா மீனை நன்கு கழுவிக்கொள்ளவும் பிறகு உப்பு போட்டு ஒரு முறை கழவவும் பிறகு மீனின் மேல் சிறு சிறு கீறல்கள் போடவும்
ஒரு வசதியான பாத்திரத்தில் சாம்பார் பொடி -3 மேஜை கரண்டி ( அல்லது மிளகாய் தூள் 2தேக்கரண்டி + தனியா தூள் 3 தேக்கரண்டி) மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் போட்டு உப்பு போட்டு கிளறிக்கொள்ளவும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும் இத்துடன் சிறதளவு புளி கரச்சலை சேர்க்கவும்கெழங்கா மீனை போட்டு நன்கு பிசரவும் கலக்கவும் கீறல் களில் கரம் சேரும்படி பிசரவும் இதனை பிரிட்ஜில் 1/2 மணிநேரம் வைத்திருக்கவும்.
வெளியில் எடுத்து ஒரு தட்டில் பரப்பிய பொட்டுக்கடலை மாவில் நன்கு பிரட்டி எடுக்கவும்
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டுப் நன்கு வறுத்து எடுக்கவும் ..
No comments:
Post a Comment