Suvaiyo Suvai - சுறா மீன் குழம்பு

இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 

சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி 


சுறா மீன் குழம்பு

தேவையான பொருட்கள் 
சுறா   மீன்                           1/2 கி லோ 
சாம்பார் பொடி                     4 மேஜைக்கரண்டி 

(அல்லது மிளகாய்  தூள்     2 
தே . கரண்டி 
தனியா தூள்                        4 தே கரண்டி + 1/2 மஞ்சள் தூள்  தே . கரண்டி ) 

புளி                                      1 1/2 எலுமிச்சை  அளவு
உப்பு                                     1/2 தே கரண்டி (அ ) தேவையான                                                                                 அளவு 
நீர்                                       4 கப் 
தக்காளி                               2

அரைக்க 

மிளகு                                 1தே. கரண்டி 
சின்ன வெங்காயம்              7    
பூண்டு                                 7 பல் 

தளிக்க 

கடுகு                                   1/2 தே கரண்டி 
வெந்தயம்                            1/4 தே கரண்டி
சீரகம்                                   1/2 தே கரண்டி
வடகம்                                 1/2 தே கரண்டி
கறிவேப்பிலை 

செய்முறை 

சுறா  மீனை நன்கு கழிவியவுடன் அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கழுவவும் பின் சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு வேகவைத்து ஆற வைக்கவும் பின் அதனுடைய தோலை மெல்ல நீக்கிவிடவும்.
மிளகு + சின்ன வெங்காயம் + பூண்டு மைய அரைத்துக் கொள்ளவும் 

புளியை 4 கப் நீர் சேர்த்து  கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளளவும் அதனுடன் சாம்பார் பொடி  4 மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய்  தூள் 2 தே . கரண்டி தனியா தூள்                        4 தே கரண்டி + 1/2 மஞ்சள் தூள்  தே . கரண்டி )  சேர்த்து உப்பு சேர்த்து ருசி பார்க்கவும். புளியின் சுவையும் மிளகாயின்  சுவையும் சம அளவில் இருக்க வேண்டும்.  


வாணலி சூடானதும் எண்ணைவிட்டு சூடாக்கவும்  கடுகு + சீரகம் + வெந்தயம் + வடகம் தாளித்து  நன்கு  வதக்கவும்  பின் மிளகு + சின்ன வெங்காயம் + பூண்டு அரைவையை சேர்க்கவும் பின் தக்காளி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் தக்காளி கரைந்து   குழைந்து வந்ததும் கரைத்து  வைத்துள்ள புளி மிளகாய் கரைச்சலை சேர்த்து
கொதிக்கவிடவும்.  

இத்துடன் சுறா மீன் துண்டுகளை சேர்க்கவும். மற்ற மீன்களை போலில்லாமல் சுறா மீன் குழம்பை  நன்கு கொதிக்கவிடவும். கறிவேப்பிலையை சேர்த்து இறக்கவும்

குறிப்பு :
சாதாரணமாக வேறு எந்த மீனாக இருந்தாலும்   மீன் துண்டுகளை போட்டவுடன் 5-8 நிமிடங்களுள் குழம்பை இறக்கிவிடவேண்டும். 

சுரா மீன் துண்டுகள் குழம்பு நன்கு கொதித்தாலும் துண்டுகள் உடையாது.
     




No comments:

Post a Comment