சங்கரா மீன் குழம்பு


இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 

சங்கரா  மீன் குழம்பு 
சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி 
மீன்-1/2 கிலோ,

புளி-எலுமிச்சை பழ அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1டீஸ்பூன்
சாம்பார்  பொடி  4- 5 மேஜை கரண்டி 

கடுகு  1 தே கரண்டி
சீரகம்-1 தே கரண்டி
வெந்தயம்-1டீஸ்பூன்
வெங்காயம்- 3
தக்காளி    -3 
மிளகுதே கரண்டி
கொத்தமல்லி தழை-1/2கட்டு
எண்ணெய்-1குழிக்கரண்டி
எலுமிச்சைபழம்-1வெந்தயம்-1டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை-தேவையான அளவு

செய்முறை:

புளியை 4 கப் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.   வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மீனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

கடாயில் எஎண்ணை  ஊற்றி சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும். பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன்,  சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 5- 7 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment