suvaiyo suvai இறால் வறுவல்

இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 


சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி 

 
தேவையான பொருட்கள்

இறால்                             250 கிராம்
பெரிய வெங்காயம்                    3
சின்ன வெங்காயம்           6
தக்காளி                           2
இஞ்சி பூண்டு விழுது          
சாம்பார் பொடி               3 மேஜைக்கரண்டி              
மஞ்சள் பொடி                1/2 தி. கரண்டி  
எண்ணை                      2 மேஜை கரண்டி
உப்பு  தேவையான அளவு

கறிவேப்பிலை  

செய்முறை 
இறாலை சுத்தமாக தோலுரித்து கழுவி வைத்துக் கொள்ளவும்  கடைசியாக கழுவும் போது  உப்பு சேர்த்து கழுவவும் மஞ்சள் பொடி சேர்த்து பிரட்டி வைக்கவும்.

பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம்    தக்காளி   ஆகியவற்றை மிக மிக சின்னதாக நறுக்கி வைத்தது கொள்ளவும். இறாலை 4 நிமிடங்கள் வேகவைத்து வைத்துக் கொள்ளவும் 

வாணலியை நன்கு சூடாக்கி எண்ணை விட்டு சூடானவுடன்   நறுக்கி வைத்து பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம்    தக்காளி  இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தக்கா'ளி  குழைந்து வரும் வரும் வரை வதக்கவும் உப்பு சேர்த்து  அத்துடன் இறால் சேர்த்து 3 நிமிடங்கள்  வறுத்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கிவிடவும். 

other suvaiyoo suvai   




No comments:

Post a Comment