இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
| சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி |
முட்டை பொரியல்
தேவையான பொருட்கள்
முட்டை 5
பெரிய வெங்காயம்
5
சாம்பார் பொடி
3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி
1/2தேக்கரண்டி
சோயா சாஸ் 1 தேக்கரண்டி
உப்பு எண்ணை
தேவையான
அளவு
செய்முறை
முட்டையை வேகவைத்து ஓடு எடுத்து முட்டை வெட்டியை பயன் படுத்தி வெட்டிய பின் வெண்மை பாகத்தை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும் (அல்லது வெண்மை பாகத்தை பிரிக்காமல் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம் )
வெங்காயத்தை மிக மிக சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலி சூடானதும் வாணலியில் எண்ணை விட்டு நறுக்கிய வெங்காயத்தை போடவும் பின் அதனுடன் மஞ்சள் பொடி சாம்பார் பொடியை சேர்த்து நன்று வதக்கவும் பொன் னிரமாக வேண்டும். வேகவைத்து வெட்டி வைத்துள்ள முட்டையை சேர்த்துகொள்ளவும். நன்கு வதக்கவும். நன்கு பொன் னிரமாக முட்டை வெங்காயமும் இணைந்து வரும்போது இறக்கிவிடவும்
அருமையான முட்டை பொரியல் தயார் .
குறிப்பு
சாம்பார் போடி கடையில் விற்கும் பொடி அல்ல.
என் சாம்பார் பொடி தயாரிப்பை என் இடுகைகளில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
குறிப்பு
சாம்பார் போடி கடையில் விற்கும் பொடி அல்ல.
என் சாம்பார் பொடி தயாரிப்பை என் இடுகைகளில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment