அரைத்து செய்யும் (விட்ட) கோழி
பிரியாணி
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி ½ கிலோ (அ) இரண்டரை கப் ( 15 நிமிடம் ( நீர் ஊற்றி) ஊற வைக்கவும்
கோழி ¾ கிலோ
வெங்காயம் 2 + தக்காளி 3 (தனித்தனியாக விழுதாக அரைக்கவும்
இஞ்சி + பூண்டு விழுது 1 t ea spoon
பச்சை மிளகாய் 5
கொத்தமல்லி கைப்பிடி அளவு
(பச்சை மிளகாய் 5 + கொத்தமல்லி கைப்பிடி அளவு இரண்டையும் நன்றாக விழுதாக
அரைத்துக் கொள்ளவும் )
மிளகாய் 2 teaspoon + தனிய 3 teaspoon + மஞ்சள் தூள் 1 teaspoon + பிரியாணி மசாலா ½ teaspoon
பட்டை + லவங்கம் + ஜாதி பத்திரி+ பிரிஞ்சி இலை ( எல்லாம் ஓரிரண்டு துண்டுகள்)
தயிர் ஒரு கப்
செய்முறை
Step 1
கோழி கறி + வெங்காயம் விழுது + தக்காளி விழுது + பச்சை மிளகாய் கொத்தமல்லி விழுது, தயிர் ஒரு கப் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி ஒரு
மணி நேரம் ஊற வைக்கவும்.
Step 2
அடுப்பில் குக்கரை வைத்து (Cookeril) எண்ணைய் விட்டு + நெய் விட்டு + பட்டை + லவங்கம் + ஜாதி பத்திரி+ பிரிஞ்சி இலை (எல்லாம் ஓரிரண்டு
துண்டுகள்) சோம்பு ½ teaspoon நன்கு வதக்கவும்
Step 1 + step 2 இணைக்கவும்
அதாவது குக்கரில் ஊறவைத்த கோழி கறி + வெங்காயம் விழுது + தக்காளி விழுது + பச்சை மிளகாய் கொத்தமல்லி விழுது, தயிர் ஒரு கப் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி ஒரு
மணி நேரம் ஊற வைதத்தை சேர்க்கவும்.
நன்கு வதக்கவும் பின்பு இஞ்சி +
பூண்டு விழுது 1 t ea spoon + மிளகாய் 2 teaspoon + தனிய 3 teaspoon + மஞ்சள் தூள் 1 teaspoon + பிரியாணி மசாலா ½ teaspoon சேர்த்து கோழி கறி நிறம் மாறி வரும் வரை நன்கு வதக்கவும்.
Step 3
ஊறவைத அரிசியை குக்கரில்
சேர்க்கவும் (குக்கரில் நீர் நிறைய இருந்தால் அதையும் சேர்த்து கணக்கிட்டு ஒரு
பங்கு அரிசிக்கு ஒண்ணரை பங்கு நீர் சேர்க்கவும ) நீரின் அளவு அதிகமானால் பிரியாணி குழைந்து
விடும்.
Step 4
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
குக்கரை மூடி மூன்று விசில் வரும்
வரை காத்திருந்து அடுப்பை நிறுத்திவிடவும்,
குக்கரை திறக்கும் நிலை வந்தவுடன் திறந்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய்விட்டு அரிசி
உடையாமல் கிளறவும்.
Step 5
சுவையான பிரியாணி தயார்
No comments:
Post a Comment