| சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி |
தேவையான பொருட்கள்
மொதகண்டை கருவாடு - 5 முதல் 7 துண்டுகள்.
புளி - பெரிய எலுமிச்சை அளவு
* சாம்பார் பொடி - 4 மஜைக்கரண்டி
(அல்லது ரெட் மிளகாய் - 2 தேக்கரண்டி + மல்லி தூள் - 3 தேக்கரண்டி)
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் - ¼ தேக்கரண்டி
வேக வைத்த மொச்சை - 50 கிராம்
கத்தரி துண்டுகள் - 6
வாழைக்காய் - 1
எண்ணெய் - ஒரு குழி கரண்டி
கடுகு - ¼ தேக்கரண்டி
சீரகம் - ½ தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை -ஒரு கொத்து
நறுக்கிய வெங்காயம் -1
சின்ன வெங்காயம் - 6
நறுக்கிய தக்காளி - 2
பூண்டு - 8 பல்
உப்பு ருசிக்க தேவையான் அளவு
செய்முறை
மொதகண்டை கருவாடு களை நன்றாக கழுவவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து
மறுபடியும் கழுவிக்கொளளவும்.
ஒரு கிண்ணத்தில் தண்ணீர் 3 கப் ஊற்றி புளி விழுது சேர்த்து கரைக்கவும் சாம்பார் பொடி (அல்லது ரெட் மிளகாய் - 2 தேக்கரண்டி + மல்லி தூள் - 3 தேக்கரண்டி)
,மஞ்சள் பொடி சீரகம் பொடி மற்றும் உப்பு கலந்து ருசி பார்க்கவும் மிளகாயின் சுவையும் புளியின் சுவையும் சம அளவில் இருக்கவேண்டும். எந்த சுவை குறைகிறதோ அதை சேர்க்கவேண்டும். இந்த கலவையை நன்கு கொதிக்கவிட வும்
ஒரு வாணலியில் எண்ணை விட்டு
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - ½ தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை -ஒரு கொத்து
தாளிக்க்கவும்
பின் இத்துடன்
நறுக்கிய வெங்காயம் -1
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 8 பல்
ஆகியவற்றை சேர்க்கவும்
ஆகியவற்றை சேர்க்கவும்
இவற்றை நன்கு வதக்கிய பின்
நறுக்கிய தக்காளி - 2தக்காளி குழைத்து வரும் வரை வதக்கவும் இதில் கொத்திதுக் கொண்டிருக்கும் புளி மற்றும் சாம்பார் போடி கரைச்சலைக் கொட்டி நன்கு கொதிக்கவிடவும்
இத்துடன் வேகவைத்த மொச்சை பருப்பு மற்றும் கத்தரிக்காய் வாழைக்காய் துண்டுகளை தயாராக வைத்திருந்து சேர்க்கவும். நன்றாக கொதி வந்தவுடன் இறக்கி விடவும். கருவேப்பிலை சிறுது தூவி இறக்கிவிடவும்
மிக மிக சுவையான மொதகண்டை கருவாடு குழம்பு தயார்
.
No comments:
Post a Comment