இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
முட்டை அடை
| சமர்ப்பணம் திருமதி ச. கிருஷ்ணவேணி |
முட்டை 5
வெங்காயம் 3
பச்சை மிளகாய் 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
அரைக்கும் பொடி
அரிசி 2 கப்
கடலை பருப்பு 1 கப்
பொட்டு கடலை 1 கப்
செய்யும் முறை
கடலை பருப்பு, பொட்டு, கடலை அரிசி இவற்றை ஒரு வாணலியில் நன்கு பொன்னிறமாக வறுக்கவும் பிறகு மிகிசில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்
முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டிமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்
வாணலியை சூடாக்கி அதில் தேவையான அளவு எண்ணை விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும். இந்த தாளிப்பை முட்டையில் சேர்த்து கொள்ளவும் இத்துடன் அரைத்து வைத்துள்ள பொடியில் இரண்டு மேஜை கரண்டி அளவும் தண்ணீரும் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும். நன்கு கலக்கவும்.
தோசை வார்க்கும் கல்லை வைத்து சுடாக்கி இந்த முட்டை கலவையை தோசை வார்ப்பது போல் ஒன்றன் பின் ஒன்றாக வார்த்து எடுக்கவும்.
சுவையான முட்டை அடை தயார்
No comments:
Post a Comment