இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
செய்முறை
வெங்காயத்தையும், கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து தூள் வகைகள் சேர்த்து தயிர், இஞ்சி, பூண்டு விழுது,
முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை சேர்த்து பிரட்டவும்.கடைசியாக உப்பு சேர்த்து ஒரு முறை பிரட்டி, 45 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனைப் போட்டு, நன்கு மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.
சிக்கன் மொறு மொறு வறுவல்
சிக்கன் – 5 துண்டுகள்
| சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி |
முட்டை (மஞ்சள் கரு
மட்டும்) - ஒன்று
தயிர் - ஒரு கப்
இஞ்சி, பூண்டு
விழுது - அரைதேக்கரண்டி
சாம்பார் பொடி -ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு
தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை
தேக்கரண்டி
மிளகுத் தூள் - கால்
தேக்கரண்டி
சீரகத் தூள் -
முக்கால் தேக்கரண்டி
சிக்கன் பொடி -
ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 கப்
பெரிய வெங்காயம்,
கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க
செய்முறை
வெங்காயத்தையும், கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து தூள் வகைகள் சேர்த்து தயிர், இஞ்சி, பூண்டு விழுது,
முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை சேர்த்து பிரட்டவும்.கடைசியாக உப்பு சேர்த்து ஒரு முறை பிரட்டி, 45 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனைப் போட்டு, நன்கு மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.
சுவையான சிக்கன் மொறு மொறு வறுவல் தயார். வெங்காயம், கொத்தமல்லித்
தழை தூவி
பரிமாறவும்.
குறிப்பு
1. சாம்பார் பொடி பற்றிய குறிப்பை எனது மற்ற இடுகைகளில் பார்க்கவும்
2. சிக்கன் போடி நான் உபயோகித்தது சக்தி சிக்கென் பொடி
|
No comments:
Post a Comment