வஞ்சிர மீன் வறுவல்

இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 




 தேவையானவை

வஞ்சிர மீன் - 6 துண்டு
எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்
  சாம்பார் பொடி  -3 மேஜை கரண்டி 

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் அரிசி மாவு - 10 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

வஞ்சிர மீன் வறுவல் செய்முறை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சாம்பார் பொடியை ( சாம்பார் பொடி  செய்வது பற்றிய குறிப்பை எனது பிற இடுகைகளில் காணலாம் ((அ)  கீழே கொடுக்கப் பட்டுள்ளதை )  சேர்த்து 
எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து மீனை ஊற வைக்கவும். உப்பை  சேர்த்து  சரிபார்க்கவும். 

இந்தக் கலவையை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
எண்ணையில் பொரித்தெடுக்கவும் .

சுவையான வஞ்சிர மீன் வறுவல் தயார்





நான் தயார் செய்யும் சாம்பார் பொடி 
தேவையான பொருட்கள்
தனியா                 1 கிலோ
குண்டு மிளகாய்          1/2 கிலோ
மிளகு                             150 கிராம்
மஞ்சள்                           100 கிராம்
கடுகு                              50 கிராம்
வெந்தியம்                      25 கிராம்
ப. அரிசி                50 கிராம்
பு. அரிசி                          100 கிராம்
க்.பருப்பு                          50 கிராம்
து.பருப்பு                         100 கிராம்
கருவேப்பிலை சிறிது 
செய்முறை
மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வாணலியை சூடாக்கி வறுத்துக்கொள்ளாவும் இவற்றை ஒரு தூக்கில் எடுத்து சென்று மிளகாய் அரவையில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் நன்றாக ஆறிய பின்னர் தூக்கில் வாரி எடுத்துக்கொள்ளவும்.

No comments:

Post a Comment