Suvai Suvai சிக்கன் குருமா


    இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 


    சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி 





  • சிக்கன் குருமா 
    சிக்கன் - 300 கிராம்
    தயிர்    - ஒரு கப் 
    மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி + ஒரு                                       தேக்கரண்டி
    தனியா        - இரண்டு  மேசைக்கரண்டி
    மஞ்சள் தூள்        1/2 தேக்கரண்டி   
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    உப்பு - அரை தேக்கரண்டி(அல்லது தேவையான அளவு)
    பூண்டு - 7 பல்
    இஞ்சி - 1 அஙகுலத் துண்டு
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    தேங்காய் துருவல் - கால் கப்
    சோம்பு - அரை மேசைக்கரண்டி
    மிளகு - அரை தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    பட்டை - 1/2 அங்குலத் துண்டு
    கிராம்பு - 1




    எலுமிச்சை - பாதி


    சிக்கனை சுத்தம் செய்து   தயிர்    - ஒரு கப் சேர்த்து ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைதத்து  எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை சிறு சிறு துண்டுகளாகவும் நறுக்கவும். இஞ்சி, பூண்டை தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
    மிக்ஸியில் தேங்காய் துருவலுடன் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
    பச்சை வாசனை போனதும் தக்காளியைச் சேர்த்து வதக்கி, சிக்கனை சேர்த்து வதக்கவும்.
    பின் வதக்கியவற்றை  போட்டு தேங்காய் விழுது சேர்த்து பிரட்டிவிடவும்.
    அதனுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள், உப்பு போட்டு கலந்துவிடவும்.
    பிறகு மேலும் மூன்று  கப் தண்ணீர் விட்டு  20 நிமிடம் கொதிக்க வைத்து  கொண்டிருந்து விட்டு  இறக்கிவிடவும்.
    சுவையான சிக்கன் குழம்பு தயார். எலுமிச்சைச் சாறு பிழிந்துவிட்டு பரிமாறவும். 


No comments:

Post a Comment