ஆட்டு கால் எலும்பு குழம்பு
இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
| சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி |
ஆட்டு எலும்பு 1/2
கிலோ
தூவரம் பருப்பு 100
கிராம்
உருளைக்கிழங்கு 150
கிராம்
கத்திரிக்காய் 150
கிராம்
முருங்கைக்காய் 2
சின்ன வெங்காயம் 100
கிராம்
பெரிய வெங்காயம் 100
கிராம்
தக்காளி கால்
கிலோ
பச்சைமிளகாய் 10
வரமிளகாய் 10
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
சோம்பு 1
டீஸ்பூன்
பட்டை 1
பிரியாணி-இலை 1
பிரியாணி-இலை 1
மஞ்சள் பொடி 1 தேக்கரண்டி
*சாம்பார் பொ 2 தேக்கரண்டி
எண்ணெய் தேவையான
அளவு
செய்முறை;-
குக்கரில் ஆட்டு
எலும்பு, தூவரம் பருப்பு, மஞ்சள்தூள், சிறிது உப்பு, மற்றும்
கிளாஸ்
தண்ணிர் சேர்த்து வேக வைக்கவும
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்
சீரகம்,சோம்பு, பட்டை,பிரியாணி இலை,பச்சைமிளகாய்,வரமிளகாய் என அனைத்தையும்
ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன்
வெங்காயம்,தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதக்கி அதனுடன் சாம்பார்
தூள் சேர்த்து வதக்கவும், தக்காளி நன்றாக வதங்கியதும்.
இந்த கலவையுடன் வேகவைத்த ஆட்டு
எலும்புக் கலவையை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும.
நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை
தூவி இறக்கவும்.
சுவையான எலும்புக் குழம்பு தயார்.
குறிப்பு;-
சாம்பார் பொடி பதில்
மிளகாய்தூள்-2டீஸ்பூன்,மல்லிதூள்-3டீஸ்பூன் சேர்க்கலாம் அப்படி சேர்க்கும் போது
மிளகாய் 5ஆக இருப்பதை 3ஆக குறைத்துக் கெள்ளவும்.
No comments:
Post a Comment