எலும்பில்லாத ஆட்டுக்கறி மிளகு வறுவல்
இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
| சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி |
எலும்பில்லாத மட்டன்
கறி - 400 கிராம்
மிளகு - 30 கிராம்
பட்டை - 110 கிராம்
கிராம்பு - 10 கிராம்
நெய் - 150 கிராம்
முதலில் கறியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி நீரில் கழுவி குக்கரில் வேகவைத்து கொள்ள வேண்டும்.
பட்டை - 110 கிராம்
கிராம்பு - 10 கிராம்
நெய் - 150 கிராம்
முதலில் கறியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி நீரில் கழுவி குக்கரில் வேகவைத்து கொள்ள வேண்டும்.
பிறகு மிளகு, பட்டை, கிராம்பு இவைகளை மிக்சியில்அரைத்து தேவையான உப்பையும் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து கழுவி வைத்திருக்கும் கறியுடன் சேர்த்து
கிளறி சுமார் அரை மணி நேரம் அப்படியே மூடி வைத்துவிட வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய்யை விட்டு
நன்றாகக் காய்ந்தவுடன் பிசிறி வைத்திருக்கும் கறியை எடுத்து அதில் போட்டு கறி நன்றாக
வேகும் வரை கிளறிக் கொண்டே இருந்து கறி மசாலாவுடன் நன்கு சேர்ந்தவுடன் (வெந்தபின்) இறக்கி விடவும்.
சுவையான ஆட்டுக்கறி மிளகு வறுவல் தயார்
No comments:
Post a Comment