- சிக்கன்-முட்டை-வறுவல்
சமர்ப்பணம் திருமதி. கிருஷ்ணவேணி - எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
- பெரிய வெங்காயம் - 2 பெரியது
- முட்டை - இரண்டு
- சோயா சாஸ் -1 தேக்கரண்டி
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 3
- கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
- இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- தயிர் 1 கப்
- மிளகுத் தூள் - முக்கால் தேக்கரண்டி + ஒரு சிட்டிகை
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
- சிக்கனுடன் தயிர் 1 கப் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வறுத்துக் கொள்ளவும். (அதிகமாக சிவக்க வறுக்கத் தேவையில்லை). வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித் தழையை பொடியாகவும் நறுக்கி வைக்கவும். தக்காளியை சற்று பெரிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையுடன் உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து அடித்து வைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும்அதனுடன் வெங்காயம், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பதமாக வதங்கியதும் விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு முட்டையை ஊற்றி கி'ளரி வேகவிடவும்முட்டை நன்கு அரை பதமாக வேகவேண்டும் இத்துடன் பொரித்த சிக்கன் , தக்காளி மீதமுள்ள மிளகு தூள் சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறிவிடவும் முட்டையும் சிக்கனும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் மல்லிதழை சேர்த்து இறக்கவும்.சுவையான சிக்கன்-முட்டை-வறுவல் தயார்
இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
No comments:
Post a Comment